search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சனி கிரகத்தால் ஏற்படும் தொந்தரவுகள்
    X

    சனி கிரகத்தால் ஏற்படும் தொந்தரவுகள்

    சனியே ஒருவரை வாழ்வில் ஏற்றம் பெறச் செய்யவும் வீழ்ச்சி அடையச் செய்யவும் காரணம் ஆவார். எந்த இடத்தில் இருந்தால் என்ன பலனை வழங்குவார் என்பதை பார்க்கலாம்.
    சனியே ஒருவரை வாழ்வில் ஏற்றம் பெறச் செய்யவும் வீழ்ச்சி அடையச் செய்யவும் காரணம் ஆவார்.  நரம்பு சம்பந்தப்பட்ட நோய், குடல் வாதம் முதலியவை இவரால் ஏற்படக்கூடியவை. பகலில் பிறந்தவருக்கு சூரியன் பிதுர்காரகன் ஆவான். இரவில் பிறந்தவருக்கு சனி பிதுர்காரகன் ஆகிறான்.

    பொதுவாக ஒருவரது பிறந்த லக்னத்திற்கு 8-6-11 ஆகிய இடங்களில் சனி நின்றால் அந்த ஜாதகம் உடையவருக்கு நன்மை யான பலன்கள் மிகுந்தும், தீமை யான பலன்கள் குறைந்தும் காணப் படும் என்று சொல்லப்படுகிறது. முதல் இடமாகிய லக்னத்தில் சனி நின்றால் ஜாதகர் தீர்க்க ஜீவனம் அமையப் பெற்றவராய் இருப்பார். அவர் தொட்டதில் எல்லாம் அவருக்கு வெற்றி கிடைக்கும்.

    ஒருவரது ஜாதகத்தில் சனி 2-ம் இடத்தில் இருந்தால் அவர் எப் பொழுதுமே தர்க்கம் நிறைந்த வராய் இருப்பார். முறையற்ற வாழ்க்கை வாழ நேரிடும். கல்வி வாய்ப்பு அவ்வளவாக இராது. குரு பார்வையோடு சனி இரண்டில் இருந்தால் பெருமை யும் சொல்லால் செல்வாக்கும் உண்டாகும்.

    ஒருவரது ஜாதகத்தில் மூன் றாம் இடத்தில் சனி இருந்தால் தன்னை விட கீழ்பட்டவர்களிடம் சிநேகிதமாய் இருப்பார். தெய்வ நம்பிக்கை ஆச்சார அனுஷ் டானம் அவ்வளவாக இல்லாதவர். ஆடம்பர வாழ்வை அனுபவிப்பார். இளைய சகோதர சகோதரிகளால் நன்மை உண்டு. ஜாதகத்தில் நான்காம் இடத்தில் சனி இருந்தால் அச்சுத்தொழிலை தொழிலாக உடையவராக இருப்பார். எதையும் தீர்க்கமாக ஆராய்ந்து செயல்படாதவர். 5-ம் இடத்தில் சனி இருந்தால் தந்தைக்கு ஆகாது. பிதுர்தோஷம் உடையவர்.

    ஆறாம் இடத்தில் சனி இருக்க அமையப் பெற்றவர்கள் சமூகத்தில் ஏதாவது ஒரு வகையில் புகழ் பெற்றிருப்பார்கள். நரம்புத் தளர்ச்சியும் வீரியக் குறைவும் அடிக்கடி கடன்படுவதால் மனக்கலக்கம் இருக்கும்.

    ஒருவரது ஜாதகத்தில் 7-ம் இடத்தில் சனி இருந்தால் மனைவியினால் இன்னல்களை அனுபவிப்பார். 8-ம் இடத்தில் சனி அமையப் பெற்றால் ஆயுள் தீர்க்கம் உண்டு. வாழ்வில் சில சமயம் துன்பங்களை அனுபவிப் பார். தொட்டதெல்லாம் தோல்வி யாகும். மூலம் போன்ற நோயால் பாதிப்பு ஏற்படும்.

    9-ம் இடத்தில் சனி அமை யப் பெற்றால் தந்தைக்கு தோஷம் என்று சொல்வார்கள். இளமையி லேயே வறுமையால் துன்பப்படுவார்கள்.

    ஜாதகத்தில் 10-ம் இடம் சனியாக அமையப் பெற்றவர்கள் ஆச்சார அனுஷ்டானங்களை பின்பற்றுவார்கள். இரும்பு சம்பந்தமான தொழிலில் ஈடுபட்டு இருப்பார். அடிக்கடி வெளியூர் பிரயாணம் மேற்கொள்பவராய் இருப்பார்.

    ஜாதகத்தில் 11-ம் இடத்தில் சனி இருந்தால் உயர்ந்த அறி வாற்றல் உடையவர். சிறந்த ஞானம் உடையவர் நீண்ட ஆயுளை பெற்றிருப்பார். வாகன வகையினால் ஆதாயம் கிட்டும். பொன், பொருள் ஈட்டி வாழ்வில் உயர்ந்த நிலை அடைவர். 12-ம் இடத்தில் சனி இருந்தால் ஆற்றல் மிக்கவர். அடக்கம் நிறைந்தவர். சகிப்புத்தன்மை மிகுந்தவர். ஆரோக்கிய குறைவு உடையவர். வறுமையில் வாடுபவர் பொருளை விரையம் செய்வர்.

    சனியும், செவ்வாயும் கூடி இருந்தாலும் அல்லது ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டாலும் இரும்பு சம்பந்தமான தொழிலை உடையவராக இருப்பார். கல்வியில் மேன்மை இருக்கும்.
    Next Story
    ×