search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    விஷக்கடியால் பாதிக்கப்பட்டவர்களை குணமாக்கும் திருத்தலம்
    X

    விஷக்கடியால் அவதிப்படுபவர்கள் இத்தலத்தில் சிறப்பு வழிபாடு செய்யப்படுவதாக கூறப்படுகிறது. அது என்ன வழிபாடு என்று கீழே பார்க்கலாம்.
    கண்ணுக்குத் தெரியாத பூச்சி, புழு போன்ற உயிரினங்களாலோ சில தாவரங்களின் ஒத்து வராத தன்மையினாலோ மனித உடலுக்கு ஒவ்வாமை ஏற்பட வாய்ப்பு உண்டு. அதனால் உடல் தோல் தடிப்பு, மூச்சிரைப்பு, ஆத்மா போன்ற உபாதைகள் ஏற்படும். இதற்கு ஆங்கில மருத்துவத்தில் உடனடியாக மருந்து மாத்திரை ஊசி மூலம் தீர்வு உண்டு. நாட்பட்ட நோய்கள் சில சித்தா, ஓமியோபதி போன்ற மருத்துவத்திலும் குணமாவது உண்டு.

    ஆனால் இவைகளில் எல்லாம் குணம் காண முடியாத மக்கள் பலரும், இறுதியில் இறைவனைத் தஞ்சம் அடைகின்றனர். அந்த நம்பிக்கையே அவர்களை குணப்படுத்தி நல்ல நிலைக்கு கொண்டு வருகிறது.

    திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்துக்கு தெற்கே 3 கிலோமீட்டர் தொலைவில் மன்னார்குடி செல்லும் சாலையில் இருக்கிறது பூவனூர் என்ற சிற்றூர். பாம்பணி ஆறு எனப்படும் பாமிணி ஆற்றின் மேல் கரையில் சாலையில் இருந்து பார்த்தாலே ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் உயர்ந்து நிற்கும் திருக்கோவிலைக் காணலாம்.

    விஷக்கடியால் அவதிப்படுபவர்கள் இத்தலத்தில் சிறப்பு வழிபாடு செய்யப்படுவதாக கூறப்படுகிறது. அந்த வழிபாடு என்ன என்று விசாரித்தோம்.

    ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலையில் இங்கு வரும் விஷக்கடியால் பாதிக்கப்பட்டவர்கள், திருக்கோவிலின் எதிரில் உள்ள ஷீர புஷ்கரணி என்ற திருக்குளத்தில் மூழ்குகிறார்கள். பின்னர் அவர்கள் கோவிலுக்குள் சென்று சுவாமியையும், அம்பாளையும் வணங்குகின்றனர். அதைத் தொடர்ந்து சாமுண்டீஸ்வரி அம்மன் சன்னிதியில் முன்பாக நிறுத்தப்படும் அவர்களுக்கு, மந்திரித்த வேர்க் கயிறு கட்டி விடப்படுகிறது. பின்னர் அனைவரும் சாமுண்டீஸ்வரி அம்மனை வழிபட்டு வீடு திரும்புகின்றனர். இவ்வாறு செய்வதால் விஷக்கடியால் பாதிக்கப்பட்டவர்கள், விரைவில் குணமடைகிறார்கள் என்பது நம்பிக்கையாக உள்ளது.விஷக்கடியால் பாதிக்கப்பட்டவர்களை குணமாக்கும் திருத்தலம்
     poovanur poovananathar temple

    Tirupoovanur-Pushpavaneshwarar-
    விஷக்கடியால் அவதிப்படுபவர்கள் இத்தலத்தில் சிறப்பு வழிபாடு செய்யப்படுவதாக கூறப்படுகிறது. அது என்ன வழிபாடு என்று கீழே பார்க்கலாம்.

    கண்ணுக்குத் தெரியாத பூச்சி, புழு போன்ற உயிரினங்களாலோ சில தாவரங்களின் ஒத்து வராத தன்மையினாலோ மனித உடலுக்கு ஒவ்வாமை ஏற்பட வாய்ப்பு உண்டு. அதனால் உடல் தோல் தடிப்பு, மூச்சிரைப்பு, ஆத்மா போன்ற உபாதைகள் ஏற்படும். இதற்கு ஆங்கில மருத்துவத்தில் உடனடியாக மருந்து மாத்திரை ஊசி மூலம் தீர்வு உண்டு. நாட்பட்ட நோய்கள் சில சித்தா, ஓமியோபதி போன்ற மருத்துவத்திலும் குணமாவது உண்டு.

    ஆனால் இவைகளில் எல்லாம் குணம் காண முடியாத மக்கள் பலரும், இறுதியில் இறைவனைத் தஞ்சம் அடைகின்றனர். அந்த நம்பிக்கையே அவர்களை குணப்படுத்தி நல்ல நிலைக்கு கொண்டு வருகிறது.

    திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்துக்கு தெற்கே 3 கிலோமீட்டர் தொலைவில் மன்னார்குடி செல்லும் சாலையில் இருக்கிறது பூவனூர் என்ற சிற்றூர். பாம்பணி ஆறு எனப்படும் பாமிணி ஆற்றின் மேல் கரையில் சாலையில் இருந்து பார்த்தாலே ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் உயர்ந்து நிற்கும் திருக்கோவிலைக் காணலாம்.

    விஷக்கடியால் அவதிப்படுபவர்கள் இத்தலத்தில் சிறப்பு வழிபாடு செய்யப்படுவதாக கூறப்படுகிறது. அந்த வழிபாடு என்ன என்று விசாரித்தோம்.

    ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலையில் இங்கு வரும் விஷக்கடியால் பாதிக்கப்பட்டவர்கள், திருக்கோவிலின் எதிரில் உள்ள ஷீர புஷ்கரணி என்ற திருக்குளத்தில் மூழ்குகிறார்கள். பின்னர் அவர்கள் கோவிலுக்குள் சென்று சுவாமியையும், அம்பாளையும் வணங்குகின்றனர்.

    அதைத் தொடர்ந்து சாமுண்டீஸ்வரி அம்மன் சன்னிதியில் முன்பாக நிறுத்தப்படும் அவர்களுக்கு, மந்திரித்த வேர்க் கயிறு கட்டி விடப்படுகிறது. பின்னர் அனைவரும் சாமுண்டீஸ்வரி அம்மனை வழிபட்டு வீடு திரும்புகின்றனர். இவ்வாறு செய்வதால் விஷக்கடியால் பாதிக்கப்பட்டவர்கள், விரைவில் குணமடைகிறார்கள் என்பது நம்பிக்கையாக உள்ளது.
    Next Story
    ×