search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    வீரையன்
    X

    வீரையன்

    எஸ்.பரீத் இயக்கத்தில் இனிகோ பிரபாகர் - ஷைனி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வீரையன்’ படத்தின் முன்னோட்டம்.
    90-களின் காலகட்டத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள படம் `வீரையன்'.

    இனிகோ பிரபாகர், ஷைனி நாயகன், நாயகிகளாக நடித்திருக்கும் இப்படத்தை எஸ்.பரீத் இயக்கியிருக்கிறார். ‘ஆடுகளம்’ நரேன், வேலா ராமமூர்த்தி, கயல் வின்சென்ட், ‘ஆரண்ய காண்டம்’ வசந்த், யூகித், ஹேமா மற்றும் திருநங்கை பிரீத்திஷா உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர்.

    இசை - அருணகிரி, ஒளிப்பதிவு - பி.வி.முருகேஷ், பாடல் வரிகள் - பரீத், காதல் மதி, யுகபாரதி, கலை இயக்குநர் - எஸ்.ஐயப்பன், நடன இயக்குநர் - சரவண ராஜன், படத்தொகுப்பு - ராஜா முகமது, கதை, தயாரிப்பு - ஃபாரா சரா பிலிம்ஸ், திரைக்கதை, வசனம், இயக்கம் - எஸ்.பரீத்

    இப்படம் ஒரு பக்கம் தந்தை - மகன், இன்னொரு பக்கம் காதலர்கள், மற்றொரு பக்கம் சமூகத்தால் கேவலமாக நடத்தப்படும் மூன்று உதவாக்கரைகள் என குடும்பம், காதல், நட்பு ஆகிய மூன்று கோணங்களில் படமாக்கப்பட்டுள்ளது.



    சோழ மன்னன் வாழ்ந்த உயர்ந்த பூமியான தஞ்சாவூர், கால ஓட்டத்தில் தடம் புரண்டு மக்களின் பயன்பாட்டில் எவ்வாறு இருக்கிறது என்பதையும், தஞ்சை மக்களின் நம்பிக்கையையும், மரியாதையையும் வலியுறுத்தும் கதையாகவும் இப்படம் உருவாகி இருக்கிறது.

    பொதுவாக கதாநாயகன், கதாநாயகி, வில்லன், காமெடியன் என்ற வழக்கமான சினிமாவின் கட்டமைப்புக்கு அப்பார்ப்பட்டதாக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. கதாபாத்திரங்களின் நியாய, தர்மங்களை சொல்லும், சூழ்நிலைகளும், சம்பவங்களுமே கதையை முன்னோக்கி எடுத்து செல்லும். இது புதியவகை எதார்த்தவாதம் என்ற கோட்பாட்டு வகையைச் சார்ந்தது. இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் திருநங்கை கதாபாத்திரமும், `சரசம்மா' என்கிற ஆவி கதாபாத்திரமும் படத்திற்கு பலத்தை கூட்டும் என்று படக்குழுவினர் கூறியுள்ளனர்.

    நவம்பர் 24-ஆம் தேதி இந்த படம் திரைக்கு வர இருக்கிறது.  

    Next Story
    ×