search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    எய்தவன்
    X

    எய்தவன்

    ஒரே சம்பவத்தால் 16 பேருக்கு ஏற்படும் சிக்கலை சொல்லும் படமான ‘எய்தவன்’ படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்ப்போம்.
    பிரண்ட்ஸ் பெஸ்ட்டிவெல் பிலிம்ஸ் தயாரிக்கும் படம் ‘எய்தவன்’.

    இந்த படத்தில் நாயகனாக கலையரசன், நாயகியாக சாதனா டைட்டஸ் நடிக்கிறார்கள். இவர்களுடன் ஆடுகளம் நரேன், வேலா ராமசாமி, கிருஷ்ணா, ராஜ்குமார், வளவன், விநோத், சவுமியா, ராதா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

    ஒளிப்பதிவு - சி.பிரேம்குமார், இசை - பார்த்தவ் பார்கோ, எடிட்டிங் - ஐ.ஜே.அலன், கலை - எம்.லட்சுமி தேவ், பாடல்கள் - நா.முத்துகுமார், ஞானவிநோத், ஸ்டண்ட் - ராக் பிரபு, நடனம் - தினா, பாபி ஆண்டனி,

    வசனம் - சக்திராஜ சேகரன், சதீஷ் சவுந்தர்.

    தயாரிப்பு - எஸ்.சுதாகரன், இயக்கம் - சக்தி ராஜசேகரன்.



    நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த சாதாரண இளைஞன் கிருஷ்ணா. ஒட்டு மொத்த குடும்பமும் தங்கையின் மேல் படிப்புக்காக சென்னைக்கு புலம் பெயர்கிறது. தங்கையின் உயர் படிப்பு கனவை நிறைவேற்றுவதில் ஏற்படும் சிக்கல்களும் அதனால் உருவாகும் பிரச்சினைகளும், கிருஷ்ணா சந்திக்கும் அரசி யல் சூழ்ச்சி களும், அதை எதிர் கொள்ள அவர் எடுக்கும் முடிவுகளுமே ‘எய்தவன்’ படத்தின் கதை.

    படம் பற்றி சக்தி ராஜசேகரனிடம் கேட்ட போது...

    “நகரின் முக்கிய இடத்தில் ஒரு சம்பவம் நடக்கிறது. இதில் 16 பேர் பாதிக்கப்படுகிறார்கள். எல்லோரும் அந்த சம்பவத்தில் இருந்து தப்பிக்க நினைக்கிறார்கள். ஆனால் நாயகன், அந்த சம்பவத்துக்கான அம்பை எய்தவன் யார் என்று தேடுகிறான். கல்வித்துறையில் உள்ள பிரச்சினைகளையும் சொல்லி இருக்கிறோம்.

    காதல், காமெடி, ஆக்‌ஷன் கலந்து கமர்சியல் படமாக ‘எய்தவன்’ உருவாகி இருக்கிறது” என்றார்.
    Next Story
    ×