search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    சினிமா பின்னணி இல்லாதவர் படம் எடுப்பது கஷ்டம்: சமுத்திரகனி
    X

    சினிமா பின்னணி இல்லாதவர் படம் எடுப்பது கஷ்டம்: சமுத்திரகனி

    சினிமா பின்னணி இல்லாமல் ஒரு படம் எடுப்பது எவ்வளவு கடினம் என்பது எனக்குத் தெரியும் என்று நடிகரும் இயக்குனருமான சமுத்திரகனி கூறியுள்ளார்.

    எம்.எம்.பவர் சினி கிரியே‌ஷன்ஸ் வாசன் ஷாஜி, டத்தோ முனியாண்டி இணைந்து தயாரிக்கும் படம் ‘வாண்டு’. புதுமுக நடிகர்கள் சீனு, எஸ்.ஆர்.குணா, ஷிகா, ‘தெறி’ வில்லன் சாய் தீனா உள்பட பலர் நடித்துள்ள இதை வாசன் ஷாஜி இயக்கி இருக்கிறார். ரமேஷ் - வி.மகேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ.ஆர்.நேசன் இசை அமைத்துள்ளார்.


    இந்த படத்தின் டிரைலர் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.


    இதில் கலந்து கொண்ட சமுத்திரகனி பேசும் போது... “சினிமா பின்னணி இல்லாமல் ஒரு படம் எடுப்பது எவ்வளவு கடினம் என்பது எனக்குத் தெரியும். ஏன் என்றால் நானும் ஆரம்ப காலத்தில் ரொம்ப கஷ்டப்பட்டேன், ஒரு இடம் கிடைப்பது ரொம்ப கடினம். இந்த படத்தின் இயக்குனர் வாசன் ஷாஜியை ஆரம்ப காலத்தில் இருந்தே தெரியும். கடின உழைப்பாளி. ரொம்ப நல்ல மனிதர்.


    இதில் பணியாற்றிய அனைவரும் தங்களது கடின உழைப்பால் இதை எடுத்து முடித்திருக்கிறார்கள். வடசென்னை மக்கள் தான் இந்த மண்ணின் மைந்தர்கள். இதன் டிரெய்லரை பார்க்கும்போது ‘கோலிசோடா’ படம் தான் நினைவுக்கு வருகிறது வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்றார்.


    கஞ்சா கருப்பு பேசும்போது, “ஆரம்ப காலத்தில் எந்த ஆபீஸ் சென்றாலும், அதன் பக்கத்திலோ, அல்லது அருகிலுள்ள டீ கடையிலோ இயக்குனர் வாசன் ஷாஜி நின்று கொண்டு இருப்பார். அன்று முதல் இன்று வரை அவர் ஓடி கொண்டுதான் இருக்கிறார். கடந்த 10 வருடமாக எனக்கு அவரை தெரியும். கடின உழைப்பு என்றும் வீண் போகாது” என்று கூறினார்.


    நிகழ்ச்சியில் இயக்குனர் வாசன் ஷாஜி, தயாரிப்பாளர் டத்தோ என்.முனியாண்டி, சீனு, எஸ்.ஆர்.குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×