search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    விஜய் சேதுபதியின் `கவண் படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி
    X

    விஜய் சேதுபதியின் `கவண்' படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி

    இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள `கவண்' படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ரிலீஸ் தேதியை கீழே பார்ப்போம்.
    கடந்த விஜய் சேதுபதி நடிப்பில் அதிகளவிலான படங்கள் வெளியாகின. வெள்ளிக்கிழமை என்றாலே விஜய் சேதுபதி படம்  ரிலீஸ் இருக்கிறதா என்று ரசிகர்கள் கேட்கும் அளவிற்கு விஜய் சேதுபதி நடிப்பில் பல படங்கள் வெளியாகின. 2017 தொடங்கி 2  மாதங்கள் முடிந்தும் விஜய் சேதுபதி நடிப்பில் எந்த படமும் ரிலீசாகவில்லை.

    இந்நிலையில், இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய்சேதுபதி முற்றிலும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கும்  படம் ‘கவண்’.



    இன்றைய சமூக சூழலுக்கு ஏற்ற படமாக உருவாகியிருக்கும் இப்படத்தில் இயக்குனர் நடிகர் டி.ராஜேந்தர் முக்கிய  கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். விஜய்சேதுபதி ஜோடியாக மடோனா செபாஸ்டின் நடித்துள்ளார். பாண்டியராஜன்,  விக்ராந்த், ‘அயன்’ ஆகாஷ், போஸ் வெங்கட், ‘நண்டு’ ஜகன், பவர் ஸ்டார் உள்பட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

    ஏ.ஜி.எஸ். எண்டர்டைன் மெண்ட் நிறுவனம் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம் இப்படத்தை தயாரித்துள்ளளார். இப்படத்திற்கு  ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார்.



    சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தை முன்னதாகவே ரிலீஸ் செய்ய  படக்குழு முடிவு செய்துள்ளது. படத்தின் சென்சார் மட்டுமே பாக்கி இருப்பதால் படத்தை மார்ச் 31-ஆம் தேதி வெளியிட படக்குழு  முடிவு செய்துள்ளதாக அர்ச்சனா கல்பாத்தி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×