search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு நாளை தீபாவளி பரிசு வழங்கப்படுகிறது
    X

    நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு நாளை தீபாவளி பரிசு வழங்கப்படுகிறது

    நடிகர்சங்க உறுப்பினர்களுக்கு துணிமணிகள்-இனிப்பு உள்ளிட்ட தீபாவளி பரிசு நாளை வழங்கப்படுகிறது

    சென்னை, அக். 22-

    நடிகர் சங்க உறுப்பினர் களுக்கு கடந்த ஆண்டு துணிகள், இனிப்புகள் தீபாவளி பரிசாக வழங்கப்பட்டது.

    இந்த ஆண்டும் நடிகர் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் தீபாவளி பரிசு வழங்கப்படுகிறது. இது குறித்து நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தென்னிந்திய நடிகர் சங்கம் கடந்த ஆண்டு போல இந்த ஆண்டும் அனைத்து உறுப்பினர்கள் குடும்பங்களுக்கும் தீபாவளி பரிசாக புது துணிமணிகள் மற்றும் இனிப்பு வகைகள் வழங்குகிறது.

    வெளியூர் உறுப்பினர் களுக்கு சங்கத்தின் துணை தலைவர் பொன்வண்ணன் தலைமையில் செயற்குழு உறுப்பினர்கள் ஸ்ரீமன், உதயா, ஹேமசந்திரன், எம்.ஏ.பிரகாஷ் ஆகியோர்கள் மேற்பார்வையில் இன்று பரிசுகள் அனுப்பி வைக்கப் பட்டது. சென்னையில் தீபாவளி பரிசுகள் வழங்கும் விழா நாளை (ஞாயிற்றுக் கிழமை) அன்று பகல் 11 மணிக்கு நடக்கிறது.

    தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் தலைமையில் தி.நகரிலுள்ள நடிகர் சங்கம் வளாகத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவில் மூத்த நடிகர், நடிகைகள், சங்க நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×