search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    அஜித்துக்கு வில்லன் அபிஷேக் பச்சனா? விவேக் ஓபராயா?
    X

    அஜித்துக்கு வில்லன் அபிஷேக் பச்சனா? விவேக் ஓபராயா?

    அஜித்துக்கு வில்லனாக நடிக்கப்போவதாக அபிஷேக் பச்சனா? விவேக் ஓபராயா? என்பது குறித்து பெரும் குழப்பம் நீடிக்கிறது. இதில் யார் நடிக்கிறார்கள் என்பதை கீழே பார்ப்போம்.
    அஜித் மூன்றாவது முறையாக சிறுத்தை சிவாவுடன் இணைந்து புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் கதாநாயகிகளாக காஜல் அகர்வால், அக்ஷராஹாசன் ஆகியோர் நடிக்கின்றனர். அப்புக்குட்டியும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பல்கேரியாவில் தொடங்கி, தற்போது ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நடிகர் தேர்வு சமீபகாலமாக நடைபெற்று வருகிறது. முதலில், இப்படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் நடிப்பதாக செய்திகள் வெளிவரத் தொடங்கியது. ஆனால், இது வெறும் புரளி என்றும் கூறப்பட்டது.

    இந்நிலையில், தற்போது பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் இந்த படத்தில் வில்லனாக நடிப்பதாக பேச்சுக்கள் அடிபடுகிறது. இருப்பினும், இன்னும் சில தினங்களில் அஜித்துக்கு வில்லனாக நடிக்கும் நடிகர் யார்? என்பதை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என தெரிகிறது.

    ‘வேதாளம்’ படத்திற்கு பிறகு காலில் அறுவை சிகிச்சை எடுத்துக்கொண்ட அஜித் இந்த படத்திற்காக சற்று உடல் எடையை குறைத்து நடித்து வருகிறார். பெரும் பொருட்செலவில் உருவாகும் இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். 
    Next Story
    ×