search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    நடிகர் ஜெயம் ரவி தோள்பட்டையில் பலத்த அடி
    X

    நடிகர் ஜெயம் ரவி தோள்பட்டையில் பலத்த அடி

    சண்டைக்காட்சியில் நடித்தபோது நடிகர் ஜெயம் ரவி தோள்பட்டையில் பலத்த அடிபட்டது. அதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
    ஜெயம் ரவி - ஹன்சிகா ஜோடியாக நடிக்கும் புதிய படம், ‘போகன்’. இந்த படத்தை ‘ரோமியோ ஜூலியட்’ படத்தின் டைரக்டர் லட்சுமணன் இயக்கி வருகிறார். படத்தின் உச்சக்கட்ட சண்டைக்காட்சி சென்னையில் படமாக்கப்பட்டது. ஜெயம் ரவி வில்லன் ஆட்களுடன் மோதுவது போன்ற காட்சி டைரக்டர் லட்சுமணன் படமாக்கிக்கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராதவிதமாக ஜெயம் ரவியின் தோள்பட்டையில் பலத்த அடிபட்டது. வலியால் அவர் துடித்தார். உடனடியாக படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. ஜெயம் ரவியை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்று சிகிச்சை அளித்தனர். அதன்பிறகு அவர் வீட்டுக்கு சென்று ஓய்வு எடுத்தார். சண்டைக்காட்சியின் தொடர்ச்சி பின்னர் படமாக்கப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.
    Next Story
    ×