search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    சிவகார்த்திகேயன் படத்தில் முன்னணி காமெடியன்கள்
    X

    சிவகார்த்திகேயன் படத்தில் முன்னணி காமெடியன்கள்

    சிவகார்த்திகேயன் படத்தில் இரண்டு முன்னணி காமெடியன்கள் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அவர்கள் யார்? என்பதை கீழே பார்ப்போம்..
    சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘ரெமோ’ படம் ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில், அடுத்தாக மோகன் ராஜா இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளார். இப்படத்தை 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் மூலம் ஆர்.டி.ராஜா தயாரிக்கவிருக்கிறார்.

    விரைவில் தொடங்கவிருக்கும் இப்படத்தின் நடிகர், நடிகையர் தேர்வுகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் இரண்டு முன்னணி காமெடியன்கள் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அவர்கள் யாரென்றால், ஆர்.ஜே.பாலாஜி, ரோபோ சங்கர் ஆகியோர்தான்.



    ஆர்.ஜே.பாலாஜி ‘தேவி’, ‘கடவுள் இருக்கான் குமாரு’, ‘கவலை வேண்டாம்’, ‘காற்று வெளியிடை’ உள்ளிட்ட பல படங்களில் காமெடியனாக நடித்து வருகிறார். அதேபோல், ரோபோ சங்கரும் ‘எஸ் 3’, ‘வீரசிவாஜி’ உள்ளிட்ட பல படங்களில் காமெடியான நடித்து வருகிறார். -

    வளர்ந்துவரும் முன்னணி காமெடியன்களான இவர்கள் தற்போது முதன்முறையாக சிவகார்த்திகேயன் படத்தில் இணைகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×