டிக்டாக் அமெரிக்க உரிமத்தை பெற ஆரக்கிள் விண்ணப்பம்

டிக்டாக் நிறுவனத்துக்கான அமெரிக்க உரிமத்தை பெற ஆரக்கிள் நிறுவனம் அரசுக்கு விண்ணப்பித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
டிக்டாக்
டிக்டாக்
Published on

டிக்டாக் உள்லிட்ட சீன செயலிகள் அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் தங்களை உளவு பார்ப்பதாகவும் கூற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பைட்-டேன்ஸ் நிறுவனம் தங்கள் அமெரிக்க செயல்பாடுகளை 90 நாட்களுக்குள் முடித்துக்கொள்ள வேண்டும் என்ற காலக்கெடு விதித்து இருந்தார்.

செப்டம்பர் 15-ந் தேதிக்குள் டிக்டாக் செயலியை அமெரிக்க நிறுவனத்திடம் விற்க வேண்டும். அல்லது டிக்-டாக் செயலிக்கு அமெரிக்காவில் முழுமையாக தடை விதிக்கப்படும் என்று டிரம்ப் உத்தரவிட்டார்.

இதையடுத்து டிக்டாக் செயலியின் அமெரிக்க செயல்பாட்டை வாங்க பிரபல தொழில்நுட்ப நிறுவனங்களான மைக்ரோசாப்ட் மற்றும் ஆரக்கிள் நிறுவனங்கள் போட்டி போட்டன.

இதில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முயற்சி தோல்வி அடைந்தது. அந்த நிறுவனத்தை பைட்டேன்ஸ் நிறுவனம் நிராகரித்தது. இதையடுத்து டிக்டாக் செயலியை வாங்குவதற்கான முயற்சியில் ஆரக்கிள் நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டு உள்ளது. மேலும் டிக்டாக் செயலியை அந்த நிறுவனம் வாங்கி விட்டதாகவும் சில தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தநிலையில் டிக்டாக் செயலியை வாங்க ஆரக்கிள் நிறுவனம், அமெரிக்க அரசுக்கு விண்ணப்பத்தை அனுப்பி உள்ளது. இதை அமெரிக்க அரசும் உறுதிப்படுத்தி இருக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com