

இந்திய அணியின் தலைசிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக திகழந்தவர் யுவராஜ் சிங். இடது கை சுழற்பந்து வீச்சாளராகவும் திகழ்ந்தார். இந்திய அணி 2007-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை வெல்வதற்கும், 2011-ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையை வெல்வதற்கும் முக்கிய காரணமாக இருந்தவர்களில் ஒருவர் யுவராஜ் சிங்.
இவரது தந்தை யோக்ராஜ் சிங். இவர் தொடர்ந்து எம்.எஸ். டோனியை விமர்சித்து வருகிறார். தனது மகனின் கிரிக்கெட் வாழ்க்கையை அழித்தவர் என வெளிப்படையாக குற்றம்சாட்டுகிறார்.
2019 உலகக் கோப்பை போட்டியில் விராட் கோலி உலக கோப்பையை வென்று விடக்கூடாது என்பதற்காக டோனி வேண்டுமென்றே மெதுவாக விளையாடி தோல்விக்கு காரணமாக அமைந்ததாக யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் சிங் கூறியுள்ளார்.
இதேபோல், 1983 ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்று தந்த கேப்டன் கபில்தேவை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ய முயன்றதாக யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் அதிர்ச்சி தரும் தகவல் ஒன்றை தெரிவித்தார்.
இது கபில்தேவ் மற்றும் தோனியின் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், தனது தந்தையின் கருத்துக்காக கபில்தேவ் மற்றும் எம்.எஸ்.தோனியிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். மேலும்,"இதுபோன்ற கூற்றுகளைத் தாம் ஆதரிக்கவில்லை" என்றார்.