Wimbledon Tennis: அரையிறுதிக்கு முன்னேறினார் ஸ்வரேவ்

விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
zverev
Published on

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.

ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் காலிறுதி சுற்று போட்டிகள் நேற்று நடந்தன.

இதில் நேற்று நடந்த போட்டியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய ஸ்வரேவ் 6-4, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

நாளை நடைபெறும் அரையிறுதி சுற்றில் ஸ்வரேவ், பிரிட்டனின் ஆர்தர் பெரி உடன் மோதுகிறார்.

மற்றொரு அரையிறுதியில் இத்தாலியின் ஜானிக் சின்னர், செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சும் மோதுகின்றனர்.

இதேபோல், பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதிக்கு அமெரிக்காவின் கோகோ காப், செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவா, உக்ரைனின் மர்டா கோஸ்ட்யூக், செக் குடியரசின் கரோலினா முசோவா ஆகியோரும் முன்னேறியுள்ளனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com