

மான்டேகார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வருகிறது.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், பிரேசிலின் ஜோ பொன்சேகா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ஸ்வரேவ் 7-5 என முதல் செட்டை வென்றார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஜோ பொன்சேகா 2வது செட்டை 7-6 (7-3) என கைப்பற்றினார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை ஸ்வரேவ் 6-3 என வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.