Wimbledon Tennis: இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் ஸ்வரேவ்

விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
zverev
Published on

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.

ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் அரையிறுதி சுற்று போட்டிகள் இன்று நடந்தன.

இதில் முதல் அரையிறுதிப் போட்டியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், பிரிட்டனின் ஆர்தர் பெரி உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய ஸ்வரேவ் 7-6 (7-0), 6-2, 6-4 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு அரையிறுதியில் இத்தாலியின் ஜானிக் சின்னர், செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சும் மோத உள்ளனர்.

இதேபோல், பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவா, செக் குடியரசின் கரோலினா முசோவா ஆகியோர் மோதவுள்ளனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com