

சுவிஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி சுவிட்சர்லாந்தில் உள்ள ஜிஸ்டாட் நகரில் நடந்து வருகிறது. கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்ளிக், நார்வேயின் காஸ்பர் ரூட் ஆகியோர் நேரடியாக 2வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த 2வது காலிறுதி சுற்றில் நார்வேயின் கேஸ்பர் ரூட், அர்ஜெண்டினாவின் ஜுலான் மேனுவல் செரண்டலோ உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய கேஸ்பர் ரூட் முதல் செட்டை 6-3 என எளிதில் வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட அர்ஜெண்டினா வீரர் அதிரடியாக ஆடி அடுத்த இரு செட்களை 7-5, 6-2 என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
இதன்மூலம் கேஸ்பர் ரூட் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
நாளை நடைபெற உள்ள அரையிறுதியில் ஜுலான் மேனுவல் செரண்டலோ, பெல்ஜியத்தின் ரபேல் கொலிக்னன் உடன் மோதுகிறார்.