Wimbledon Tennis இறுதிப்போட்டி: சின்னர், ஸ்வரேவ் நாளை மோதல்

விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
sinner, zverev
Published on

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.

லீக் சுற்றுப் போட்டிகள் முடிந்து காலிறுதி, அரையிறுதி சுற்று போட்டிகளும் நேற்றுடன் நிறைவடைந்தன.

இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டி நாளை நடைபெறுகிறது. இதில் நடப்பு சாம்பியனும், நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் உடன் மோதுகிறார்.

இதில் சின்னர் வென்று மீண்டும் சாம்பியன் பட்டம் பெறுவாரா என்றும், சின்னருக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்து ஸ்வரேவ் சாம்பியன் பட்டம் பெறுவரா எனவும் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இதேபோல், இன்று நடக்கும் பெண்கள் ஒற்றையர் பிரிவில் செக் குடியரசின் கரோலினா முசோவா, சக நாட்டு வீராங்கனையான லிண்டா நோஸ்கோவா உடன் மோதுகிறார். இதில் யார் வெற்றி பெற்றாலும் முதல் முறையாக சாம்பியன் பட்டம் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com