Italy Open டென்னிஸ்: காலிறுதி சுற்றில் ரிபாகினா அதிர்ச்சி தோல்வி

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோம் நகரில் நடந்து வருகிறது.
Italy Open டென்னிஸ்: காலிறுதி சுற்றில் ரிபாகினா அதிர்ச்சி தோல்வி
Published on

களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோம் நகரில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா, உக்ரைனின் எலினா ஸ்விடோலினா உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய உக்ரைன் வீராங்கனை 2-6, 6-4, 6-4 என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

இதன்மூலம் முன்னணி வீராங்கனையான கஜகஸ்தானின் ரிபாகினா அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com