விம்பிள்டன் இறுதிப் போட்டிய காண குடும்பத்துடன் வருகை தந்த இளவரசர் வில்லியம்

மகளிர் வெற்றியாளர் லிண்டா நோஸ்கோவாவுக்கும் அவரே கோப்பையை வழங்கினார்.
விம்பிள்டன் இறுதிப் போட்டிய காண குடும்பத்துடன் வருகை தந்த இளவரசர் வில்லியம்
Published on

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது. லீக் சுற்று போட்டிகள் முடிந்து காலிறுதி, அரையிறுதி சுற்று போட்டிகளும் முடிவடைந்துள்ளன. இதைத் தொடர்ந்து நடைபெற்று வரும் இறுதிப் போட்டியில் ஜானிக் சின்னர் மற்றும் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் கோப்பையை வெல்ல பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

இந்தப் போட்டியை காண இளவரசர் வில்லியம் தனது மனைவி கேட் மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகளுடன் வந்துள்ளார். இவர்கள் தவிர்த்து பிரபல நடிகர்கள் டஸ்டின் ஹாஃப்மேன், நிக்கோல் கிட்மேன் மற்றும் பென் ஸ்டில்லர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் அரச குடும்பத்தினருக்கான பெட்டியில் அமர்ந்திருந்தனர்.

பரிசளிப்பு:

விம்பிள்டன் பச்சை நிற ஆடையை அணிந்திருந்த கேட், ஆல் இங்கிலாந்து கிளப்பின் புரவலர் ஆவார். அவர் ஜானிக் சின்னர் மற்றும் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் ஆகியோருக்கு இடையேயான போட்டியின் வெற்றியாளருக்கு கோப்பையை வழங்குவார்.

முன்னதாக நேற்று (சனிக்கிழமை) மகளிர் வெற்றியாளர் லிண்டா நோஸ்கோவாவுக்கும் அவரே கோப்பையை வழங்கினார். ஆனால் அவருடன் எந்த குடும்ப உறுப்பினர்களும் வரவில்லை.

இந்தத் தம்பதியரின் இரண்டு மூத்த குழந்தைகளான இளவரசர் ஜார்ஜ் மற்றும் இளவரசி சார்லோட் ஆகியோரும் போட்டியை கண்டுகளித்தனர். கடந்த ஆண்டு இறுதிப் போட்டியில் சின்னர், கார்லோஸ் அல்கராஸை வீழ்த்தியதை காண நால்வரும் வந்திருந்தனர்.

இதர பிரபலங்கள்:

அரச குடும்பத்தினருக்கான பெட்டியில் இருந்த மற்ற முக்கிய பிரமுகர்களில் ஜெர்மன் அதிபர் ஃபிரெட்ரிக் மெர்ஸ் மற்றும் இத்தாலியின் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆண்ட்ரியா அபோடி ஆகியோரும் அடங்குவர்.

முன்னாள் விம்பிள்டன் சாம்பியன்களான ஸ்டெஃபான் எட்பெர்க், லெய்டன் ஹெவிட், ரிச்சர்ட் கிராஜிசெக், ஜான் கோட்ஸ் மற்றும் ஸ்டான் ஸ்மித் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com