Wimbledon Tennis: கலப்பு இரட்டையரில் சாம்பியன் பட்டம் வென்றது ஆஸ்டாபென்கோ-அரேவலோ ஜோடி

விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
mixed doubles
Published on

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.

இதில் கலப்பு இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் லாத்வியாவின் ஆஸ்டாபென்கோ - எல்-சால்வடாரின் அரேவலோ ஜோடி, ஆஸ்திரேலியாவின் ஸ்டார்ம் ஹண்டர்-மார்க் போல்மன்ஸ் ஜோடி உடன் மோதியது.

இதில் சிறப்பாக ஆடிய ஆஸ்திரேலிய ஜோடி முதல் செட்டை 6-4 என வென்றது.

இதில் சுதாரித்துக் கொண்ட ஆஸ்டாபென்கோ-அரேவலோ ஜோடி அதிரடியாக ஆடி அடுத்த இரு செட்களை 7-5, 6-2 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இதன்மூலம் கலப்பு இரட்டையரில் சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.

லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டாபென்கோவுக்கு இது முதல் விம்பிள்டன் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com