Wimbledon Tennis: பவுலினியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் உக்ரைன் வீராங்கனை

விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
marta kostyuk
Published on

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது. இதில் லீக் சுற்றுப் போட்டிகள் முடிந்து காலிறுதி சுற்று போட்டிகள் இன்று நடைபெற்றன.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த காலிறுதி போட்டியில் உக்ரைன் வீராங்கனையான மர்டா கோஸ்ட்யூக், இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினியுட மோதினார்.

ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடிய மர்டா கோஸ்ட்யூக் 6-3, 6-2 என எளிதில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

இதன்மூலம் முன்னணி வீராங்கனையான இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி தொடரில் இருந்து வெளியேறினார்.

மற்றொரு காலிறுதிப் போட்டியில் செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவா 6-3, 7-5 என்ற செட் கணக்கில் பெல்ஜியத்தின் எலைஸ் மெர்டனை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

நாளை நடைபெறும் அரையிறுதியில் மர்டா கோஸ்ட்யூக், செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவாவை சந்திக்க உள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com