Wimbledon Tennis: கரோலினா முசோவாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் லிண்டா நோஸ்கோவா

விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
linda noskova
Published on

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது. இதில் லீக் சுற்று, காலிறுதி சுற்று, அரையிறுதி சுற்று போட்டிகள் முடிவடைந்தன.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவா, சக நாட்டு வீராங்கனையான கரோலினா முசோவா உடன் மோதினார்.

தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய லிண்டா நோஸ்கோவா முதல் செட்டை 6-2 என வென்றார். இதற்கு பதிலடியாக இரண்டாவது செட்டை 7-5 என கரோலினா முசோவா போராடி கைப்பற்றினார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை லிண்டா நோஸ்கோவா 6-3 என வென்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

சாம்பியன் பட்டம் வென்ற லிண்டா நோஸ்கோவாவுக்கு 46 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. இரண்டாவது இடம் பெற்ற கரோலினா முசோவாவுக்கு 23 கோடி ரூபாய் கிடைத்தது.

இன்று நடைபெறும் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னரும், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவும் மோதுகின்றனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com