பெண்கள் டென்னிஸ்: தரவரிசையில் 5 இடம் முன்னேறிய லிண்டா நோஸ்கோவா

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார் செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவா.
linda noskova
Published on

சமீபத்தில் நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் செக் குடியரசின் கரோலினா முசோவாவை வீழ்த்தி சக நாட்டு வீராங்கனையான லிண்டா நோஸ்கோவா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

இந்நிலையில், பெண்கள் தரவரிசையில் செக் குடியரசு வீராங்கனையான லிண்டா நோஸ்கோவா 5 இடங்கள் முன்னேறி 7வது இடம் பிடித்துள்ளார்.

முதல் இடத்தில் சபலென்காவும், 2வது இடத்தில் எலினா ரிபாகினாவும் நீடிக்கின்றனர்.

அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா ஒரு இடம் முன்னேறி 3வது இடத்தில் நீடிக்கிறார்.

மற்றொரு அமெரிக்க வீராங்கனையான கோகோ காப் 3 இடங்கள் முன்னேறி 4-வது இடத்துக்கு முன்னேறினார்.

ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா 5வது இடத்திலும், செக் குடியரசின் கரோலினா முசோவா 6வது இடத்திலும் உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com