Wimbledon Tennis: கோகோ காப்பை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முசோவா

விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
karolina muchova
Published on

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது. காலிறுதி ஆட்டங்கள் முடிந்து தற்போது அரையிறுதி ஆட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் அரையிறுதி சுற்று போட்டிகள் இன்று நடந்தன.

முதலில் நடந்த அரையிறுதி போட்டியில் செக் குடியரசின் கரோலினா முசோவா, அமெரிக்காவின் கோகோ காப் உடன் மோதினார்.

இதில் ஆரம்பமே முதலே அதிரடியாக ஆடிய முசோவா முதல் செட்டை 6-2 என கைப்பற்றினார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கோகோ காப் இரண்டாவது செட்டை 6-1 என வென்றார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் சிறப்பாக ஆடிய கரோலினா முசோவா 7-6 (12-10) என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

இதன்மூலம் அமெரிக்காவின் கோகோ காப் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

ஏற்கனவே, முன்னணி வீராங்கனைகளான பெலாரசின் அரினா சபலென்கா, கஜகஸ்தானின் ரிபாகினா, அமெரிக்காவின் அமெண்டா அனிசிமோவா உள்ளிட்ட பல்வேறு வீராங்கனைகள் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com