Charleston Open டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ஜெசிகா பெகுலா

சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
ஜெசிகா பெகுலா
ஜெசிகா பெகுலா
Published on

சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.

இந்தத் தொடரில் நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்று போட்டியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, சக நாட்டு வீராங்கனையான இவா ஜோவிக் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய பெகுலா முதல் செட்டை 6-4 என வென்றார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக 2வது செட்டை இவா ஜோவிக் 7-5 என போராடி கைப்பற்றினார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை ஜெசிகா பெகுலா 6-3 என வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com