Wimbledon Tennis: ஆண்கள் இரட்டையரில் சாம்பியன் பட்டம் வென்றது நம்பர் 1 ஜோடி

விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
henry patten haary heliovara
Published on

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது. இதில் லீக் சுற்று, காலிறுதி மற்றும் அரையிறுதி சுற்று போட்டிகள் முடிந்தன.

இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் நம்பர் 1 தரவரிசையில் உள்ள பின்லாந்தின் ஹாரி ஹீலியோவரா-பிரிட்டனின் ஹென்றி பேட்டன் ஜோடி, குரோசியாவின் மேட் பாவிக்-எல் சால்வடாரின் மார்செலோ அரேவலோ ஜோடி உடன் மோதியது.

தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய ஹாரி ஹீலியோவரா-ஹென்றி பேட்டன் ஜோடி 7-6 (7-4), 7-6 (7-3) என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com