Wimbledon Tennis: ஜோகோவிக்-ஐ வீழ்த்திய சின்னர் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்

விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
Wimbledon Tennis: ஜோகோவிக்-ஐ வீழ்த்திய சின்னர் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்
Published on

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் அரையிறுதி சுற்று போட்டிகள் இன்று நடந்தன.

இதில் முதல் அரையிறுதிப் போட்டியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், பிரிட்டனின் ஆர்தர் பெரி உடன் மோதினார். இதில் சிறப்பாக ஆடிய ஸ்வரேவ் 7-6 (7-0), 6-2, 6-4 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு அரையிறுதியில் இத்தாலியின் ஜானிக் சின்னர், செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சும் மோதினர். இந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடிய ஜானிக் சின்னர் ஏழுமுறை சாம்பியன் பட்டம் வென்ற நோவக் ஜோகோவிக் 6-4, 6-4, 6-4 கணக்கில் வீழ்த்தி விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

புல்வெளி ஆடுகள கிராண்ட்ஸ்லாம் போட்டியில் தனது பட்டத்தை தக்கவைத்து கொள்ளும் நோக்கில், தரவரிசையில் முதலிடத்தில் உள்ள சின்னர், ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதி போட்டியில் இரண்டாம் நிலை வீரரான அலெக்சாண்டர் ஸ்வெரேவை எதிர்கொள்கிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com