

ஸ்காட்லாந்தில் கிளாஸ்கோவில் 2026 காமன்வெல்த் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இந்த போட்டி அதிகாரப்பூர்வமாக ஜூலை 23-ந்தேதி OVO Hydro மைதானத்தில் நடக்கிறது. இந்த தொடக்க போட்டியின்போது ஒவ்வொரு நாட்டின் வீரர்களும் அணிவகுத்து செல்வார்கள். ஒருவர் நாட்டின் தேசியக் கொடியையும், மற்றொருவர் Baton-யையும் ஏந்திச் செல்வார்கள்.
இந்த நிலையில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மீராபாய் சானு இந்தியாவின் தேசிக் கொடியை ஏந்திச் செல்வார். லவ்லினா போர்கோஹெய்ன் Baton-ஐ ஏந்திச் செல்வார் என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் (IOA) தெரிவித்துள்ளது.
இதை இந்திய ஒலிம்பிக் சங்கம் தலைவர் பி.டி உஷா உறுதிப்படுத்தியுள்ளார். இந்த இரு ஒலிம்பிக் வீரர்களின் நியமனம் இந்திய விளையாட்டுத் துறைக்கு அவர்கள் ஆற்றிய பங்களிப்பைப் பிரதிபலிக்கிறது. என்று தெரிவித்த அவர், போட்டிகளில் பங்கேற்கும் ஒட்டுமொத்தக் குழுவினருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இந்தியாவைச் சேர்ந்த 126 வீரர்கள்- வீராங்கனைகள் காமன்வெல்த் போட்டிகளில் பல்வேறு பிரிவுகளில் கலந்து கொண்டு விளையாட இருக்கிறார்கள்.
வெய்ட்லிஃப்்டிங் பிரிவில் மீராபாய் சானு பதக்கம் வெல்ல வாய்ப்புள்ள முக்கிய வீராங்கனையாக திகழ்கிறார். இவர் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனைப் படைத்தார். அதில் இருந்து இந்தியாவின் முக்கிய நட்சத்திர வீராங்கனையாக திகழ்ந்து வருகிறார்.
2024-ம் ஆண்டு பாரீசில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் போட்டியில் நூழிலையில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார். அதன்பின் தீவிர பயிற்சி மேற்கொண்டு தற்போது காமன்வெல்த் போட்டியில் சாதனைப் படைக்க களம் இறங்கியுள்ளார்.
இவர் 2022-ம் ஆண்டு பர்மிங்காமில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
லவ்லினா போர்கோஹெய்ன் குத்துச் சண்டை வீராங்கனை ஆவார். டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்றார். கிளாஸ்கோவில் சிறப்பாக செயல்பட்டு முதல் காமன்வெல்த் பதக்கத்தை வெல்ல ஆர்வமாக உள்ளார்.
2023 உலக பாக்சிங் சாம்பியன்ஷிப்பில் தங்கப்பதக்கம் வென்றார். 2023 ஆசிய போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இருவரும் தற்போது இங்கிலாந்தில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.