முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: ஆப்கானிஸ்தான் விலகியதால் ஜிம்பாப்வே சேர்ப்பு

பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதலில் ஆப்கானிஸ்தானில் மூன்று உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் பலியானார்கள். இதனால் முத்தரப்பு போட்டியில் இருந்து விலகுவதாக ஆப்கானிஸ்தான் அறிவித்தது.
முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: ஆப்கானிஸ்தான் விலகியதால் ஜிம்பாப்வே சேர்ப்பு
Published on

லாகூர்:

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை ஆகிய 3 நாடுகள் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 17-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை ராவல்பிண்டி, லாகூரில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

இதற்கிடையே, பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லை தாண்டி நடத்திய வான்வெளி தாக்குதலில் ஆப்கானிஸ்தானில் மூன்று உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் பலியானார்கள். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த ஆப்கானிஸ்தான், முத்தரப்பு போட்டியில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தது.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணி விலகியதால் அதற்கு பதிலாக ஜிம்பாப்வே அணி சேர்க்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இதன் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி, ஜிம்பாப்வேயை அடுத்த மாதம் 17-ந்தேதி எதிர்கொள்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com