300-வது சர்வதேச போட்டியில் விளையாடும் ஸ்மிருதி மந்தனா

இந்திய அணியின் தொடக்க வீராங்கனையாக ஸ்மிருதி மந்தனா களமிறங்கினார்.
smirti mandana
Published on

இந்திய பெண்கள் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. அதில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி வென்றது.

அதன் தொடர்ச்சியாக, இரு அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி லார்ட்சில் இன்று தொடங்குகிறது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் நாட் சீவர் பிரண்ட் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. தொடக்க வீராங்கனையாக ஸ்மிருதி மந்தனா களமிறங்கினார்.

இந்நிலையில், இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தனது 300-வது சர்வதேச போட்டியை இன்று விளையாடி சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான வரலாற்றுச் சிறப்புமிக்க லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் மூலம் இந்த மைல்கல்லை எட்டினார்.

சர்வதேச அளவில் 300 போட்டிகளில் விளையாடிய 12-வது வீராங்கனை மற்றும் இளம் வயதிலேயே இந்த சாதனையை எட்டிய முதல் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

ஏற்கனவே, இந்தியாவின் மிதாலி ராஜ் 333 போட்டிகளிலும், ஹர்மன்ப்ரீத் கவுர் 374 போட்டிகளிலும் விளையாடி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com