

19 வயதிற்கு உட்பட்டோருக்கான இந்திய அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இன்று இரண்ட போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி காலேயில் தொடங்கியது. இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. திமந்தா மகாஹவிதனா மற்றம் துலித் சிகேரா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
திமந்தா மகாஹவிதனா 2 ரன்கள் எடுத்த நிலையிலும், துலித் சிகேரா ரன்ஏதும் எடுக்காமலும் காவ்யா பரேஷ் படேல் பந்தில் க்ளீன் போல்டாகினர். அடுத்து 3-வது விக்கெட்டுக்கு செனுஜா வெகுநகோடா உடன் கேப்டன் விமத் தின்சரா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. தின்சரா 99 பந்தில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து கவிஜா கமகே களம் இறங்கினார். மறுமுனையில் வெகுநகோடா சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். கமகு 49 ரன்களில் ஆட்டமிழந்தார்.
5-வது விக்கெட்டுக்கு வெகுநகோடா உடன் சமிகா ஹீனதிகலா ஜோடி சேர்ந்தார். வெகுநகோடா சதத்தை இரட்டை சதமாக மாற்றினார். முதல்நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி 89 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 344 ரன்கள் குவித்துள்ளது. வெகுநகோடா 203 ரன்களுடனும், சமிகா ஹீனதிகலா 33 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
2-வது டெஸ்ட் 20-ந்தேதி தொடங்குகிறது. இந்த டெஸ்ட் 4 நாட்கள் கொண்ட போட்டியாகும். இதற்கு முன்னதாக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கை 2-1 எனக் கைப்பற்றியிருந்தது.