பிரமாண்டமாக நடைபெற இருக்கும் WPL துவக்க விழாவில் பங்கேற்கிறார் ஷாருக் கான்

நிகழ்ச்சியில் ஷாருக் கான் கலந்து கொள்வது உறுதியானது.மகளிர் பிரீமியர் லீக் தொடர் மார்ச் 17-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
பிரமாண்டமாக நடைபெற இருக்கும் WPL துவக்க விழாவில் பங்கேற்கிறார் ஷாருக் கான்
Published on

இந்தியாவில் விரைவில் துவங்க இருக்கும் மகளிர் கிரிக்கெட் லீக் தொடரில் பாலிவுட் திரை நட்சித்திரம் ஷாருக் கான் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இரண்டாவது மகளிர் பிரீமியர் லீக் தொடரின் துவக்க நிகழ்ச்சியில் பல்வேறு திரை பிரபலங்கள் மற்றும் நட்சத்திரங்கள் கலந்து கொள்கின்றனர்.

நாளை (பிப்ரவரி 23) மாலை 6.30 மணிக்கு இரண்டாவது மகளிர் பிரீமியர் லீக் தொடரின் அறிமுக நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. பெங்களூருவில் உள்ள எம்.ஏ. சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கும் இந்த நிகழ்ச்சியில் ஷாருக் கான் கலந்து கொள்வது உறுதியாகி இருக்கிறது.

ஷாருக் கான் மட்டுமின்றி ஷாஹித் கபூர், கார்திக் ஆர்யன், வருண் தவான், டைகர் ஷெராஃப் உள்ளிட்ட பிரபலங்களும் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் போட்டியில் கடந்த ஆண்டு இறுதி போட்டியில் மோதிய மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் விளையாட உள்ளன. மகளிர் பிரீமியர் லீக் தொடர் நாளை துவங்கி மார்ச் 17-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com