லார்ட்ஸ் டெஸ்டில் அபார வெற்றி: இந்திய மகளிர் அணிக்கு பாராட்டு தெரிவித்த சச்சின்

லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய மகளிர் அணி பெற்ற இந்த வெற்றி வரலாற்றுச் சிறப்புமிக்கது.
sachin, mandana
Published on

இந்தியா-இங்கிலாந்து மகளிர் அணிகள் இடையே லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்தியா முதல் இன்னிங்சில் 285 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 170 ரன்னில் சுருண்டது.

தொடர்ந்து ஆடிய இந்திய அணி 2-வது இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 341 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. இதனால் இங்கிலாந்து அணிக்கு 457 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இந்தியா வெற்றி

இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 186 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா 270 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய மகளிர் அணி பெற்ற இந்த வெற்றி வரலாற்றுச் சிறப்புமிக்கது.

டெண்டுல்கர் பாராட்டு

இந்நிலையில், லார்ட்ஸ் மைதானத்தில் பெற்ற இந்த சிறப்பான வெற்றிக்காக கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இந்திய மகளிர் அணிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சச்சின தனது சமூக வலைதளத்தில்கூறியதாவது:

லார்ட்ஸ் மைதானத்தில் விளையாட வேண்டும் என்பது ஒவ்வொரு கிரிக்கெட் வீரரின் கனவாக இருக்கிறது. கடந்த 4 நாட்களில் முதல் முறையாக மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிரிக்கெட்டின் தாயகமான லார்ட்சில் நடைபெற்றதால் ஒரு புதிய தலைமுறை இந்தக் கனவை நனவாக்கி உள்ளது.

ஓர் அற்புதமான வெற்றியைப் பெற்ற இந்திய மகளிர் அணிக்கு வாழ்த்துக்கள். ஸ்மிருதியின் நிதானமான ஆட்டம், யாஸ்திகாவின் அபாரமான சதம் மற்றும் கிராந்தியின் 5 விக்கெட் சாதனை ஆகியவை இந்தத் தருணத்தை மேலும் சிறப்பாக்கி உள்ளன.

மகளிர் கிரிக்கெட்டின் குறிப்பிடத்தக்க பயணத்தில் இது மற்றொரு சிறப்பான முன்னேற்றப் படி ஆகும் என தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com