விராட் கோலியுடன் செல்பி எடுத்த ராதிகா சரத்குமார்- வைரலாகும் புகைப்படம்

இந்தியா அணி வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி 19-ந் தேதி தொடங்குகிறது. டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணி சென்னை வந்துள்ளது.
விராட் கோலியுடன் செல்பி எடுத்த ராதிகா சரத்குமார்- வைரலாகும் புகைப்படம்
Published on

இந்தியா- வங்கதேசம் அணிகள் டெஸ்ட் மற்றும் டி20 தொடரில் மோத உள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 19-ந் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்க உள்ளது. இந்த போட்டிக்காக இந்திய அணி சென்னைக்கு வந்துள்ளது.

இந்நிலையில் விமான பயனத்தின்போது விராட் கோலியை சந்தித்து அவருடன் நடிகை ராதிகா சரத்குமார் செல்பி எடுத்துக் கொண்டார். இது தொடர்பாக ராதிகா சரத்குமாரின் எக்ஸ் தள பதிவில், "இலட்சக்கணக்கான மக்களின் அன்புக்குரிய விராட் கோலியை லண்டனிலிருந்து சென்னை திரும்பும்போது சந்தித்ததில் மகிழ்ச்சி. சென்னையில்தான் விளையாடவுள்ளேன் என்றார். அவர் வெற்றி பெற வாழ்த்தினேன். செல்ஃபிக்கு நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com