பந்தை சேதப்படுத்திய பாகிஸ்தான் வீரர் பஹர் ஜமானுக்கு தடை

பஹர் ஜமானுக்கு இரண்டு பி.எஸ்.எல்.ஆட்டங்களில் விளையாட தடை விதிக்கப்பட்டது.
பந்தை சேதப்படுத்திய பாகிஸ்தான் வீரர் பஹர் ஜமானுக்கு தடை
Published on

லாகூர்:

பாகிஸ்தானில் நடந்து வரும் பி.எஸ்.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த லாகூர் கலாண்டர்சுக்கு எதிரான ஆட்டத்தில் கராச்சி கிங்ஸ் அணி 129 ரன் இலக்கை 19.3 ஓவர்களில் எட்டிப்பிடித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முன்னதாக கடைசி ஓவரில் கராச்சியின் வெற்றிக்கு 14 ரன் தேவைப்பட்ட போது, லாகூர் வீரர்கள் பஹர் ஜமான், கேப்டன் ஷகீன் ஷா அப்ரிடி, வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவுப் ஆகியோர் பந்தை கையில் வைத்துக் கொண்டு ஒன்று கூடி ஆலோசித்தனர்.

சந்தேகப்பட்ட நடுவர்கள் பந்தை வாங்கி பார்த்த போது அது சேதப்படுத்தப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களுக்கு அபராதம் விதிக்கும் வகையில் எதிரணிக்கு 5 ரன் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் பஹர் ஜமானிடம் போட்டி நடுவர் ரோஷன் மகனாமா நடத்திய விசாரணையில் அவர் பந்தின் தன்மையை மாற்றியது உறுதியானது. இதனால் பஹர் ஜமானுக்கு இரண்டு பி.எஸ்.எல்.ஆட்டங்களில் விளையாட தடை விதிக்கப்பட்டது. இந்த முடிவை எதிர்த்து பஹர் ஜமான், அடுத்த 48 மணி நேரத்திற்குள் பி.எஸ்.எல். தொழில்நுட்ப கமிட்டியிடம் அப்பீல் செய்யலாம்.

X

Maalai Malar
www.maalaimalar.com