வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ஜாம்பவான் சர் கார்பீல்டு சோபர்ஸ் காலமானார்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 1954 முதல் 1974-ம் ஆண்டு வரை விளையாடிய தலைசிறந்த ஆல்ரவுண்டர் ஆவார்.
Sir Garfield Sobers
சர் கார்பீல்டு சோபர்ஸ்
Published on

வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜாம்பவானாக திகழ்ந்த சர் கார்பீல்டு சோபர்ஸ், தனது 89 வயதில் இன்று காலமானார். இவர் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளார். இவர் சிறந்த இடது கை பேட்ஸ்மேன், பந்து வீச்சாளர் ஆல்-ரவுண்டர் ஆவார்.

90 வயதை பூர்த்தி செய்வதற்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், இயற்கை எய்தியுள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் அசத்தினார் கார்பீல்டு சோபர்ஸ்

இவர் 1954-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 1974 ஏப்ரல் மாதம் வரை சுமார் 20 ஆண்டுகள் விளையாடியுள்ளார். 93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அவர் 8,032 ரன்கள் அடித்துள்ளார். இதில் 26 சதங்கள் 30 அரைசதங்கள் அடங்கும். சராசரி 57.78 ஆகும். 365 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தது அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் மட்டும்...

தனது அபாரமான இடது கை வேகப்பந்து வீச்சால் 235 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 6 முறை 5 விக்கெட்டுகளும், 8 முறை 4 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். இவர் ஒரேயொரு ஒருநாள் போட்டியில் மட்டும் விளையாடியுள்ளார்.

தொடர்ச்சியாக 6 சிக்சர்கள் அடித்தவர்

அதோடு மட்டுமல்ல முதல்தர போட்டியில் தொடர்ச்சியாக 6 சிக்சர்கள் அடித்த முதல் பேட்ஸ்மேன் ஆவார்கள். 1968-ல் நாட்டிங்காம்ஷைர் அணிக்காக விளையாடியபோது கிளாமோர்கன் அணிக்கு எதிராக இந்த சாதனையைப் படைத்துள்ளார்.

முதல் தர போட்டிகள்

383 முதல்தர போட்டிகளில் விளையாடி 86 சதங்கள், 121 அரைசதங்களுடன் 28314 ரன்கள் அடித்துள்ளார். அதோடு 1043 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 1 முறை 10 விக்கெட்டும் 36 முறை 5 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.

Sir Garfield Sobers
சர் கார்பீல்டு சோபர்ஸ்

லிஸ்ட் ஏ போட்டிகள்

95 லிட்ஸ் ஏ போட்டிகளில் 1 சதம், 18 அரைசதங்களுடன் 2721 ரன்கள் அடித்துள்ளார். 109 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

இவரது மறைவுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் தற்போதைய கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சாதனையை முறியடித்த லாரா

பாகிஸ்தானுக்கு எதிராக 1958-ல் டெஸ்ட் கிரிக்கெட் ஒரு இன்னிங்சில் ஆட்டமிழக்காமல் 365 ரன்கள் குவித்தது சாதனையை இருந்தது. அதை பிரையன் லாரா 36 வருடங்களுக்குப் பிறகு 1994-ல் 375 ரன்கள் அடித்து முறியடித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com