பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இன்றைய ஐபிஎல் போட்டியில் அஞ்சலி - பிசிசிஐ அறிவிப்பு

இன்றைய ஐபிஎல் போட்டியின்போது மௌன அஞ்சலி செலுத்தப்படும் என்று பிசிசிஐ அறிவிப்புவீரர்கள், நடுவர்கள் கையில் கறுப்பு பட்டை அணிந்து விளையாட உள்ளனர்.
பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இன்றைய ஐபிஎல் போட்டியில் அஞ்சலி  - பிசிசிஐ அறிவிப்பு
Published on

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இரவு ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும் 41-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில், பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இன்றைய ஐபிஎல் போட்டியின்போது மௌன அஞ்சலி செலுத்தப்படும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இந்த போட்டியின் போது உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வீரர்கள், நடுவர்கள் கையில் கறுப்பு பட்டை அணிவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் பஹல்காமில் உள்ள சுற்றுலா தலத்தில் தீவிரவாதிகள் நேற்று மாலை நடத்திய துப்பாக்கி சூடு தாக்குதலில் 2 வெளிநாட்டினர் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com