ஐபிஎல் 2018- நன்னடத்தை விதியை மீறி கண்டனத்திற்குள்ளான ஷிவம் மவி, அவேஷ் கான்

நன்னடத்தை விதிமுறையை மீறிய இளம் வீரர்களான ஷிவம் மவி, அவேஷ் கான் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளனர். #IPL2018 #DDvKKR
ஐபிஎல் 2018- நன்னடத்தை விதியை மீறி கண்டனத்திற்குள்ளான ஷிவம் மவி, அவேஷ் கான்
Published on

டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் 40 பந்தில் 93 ரன்கள் விளாசி டெல்லி அணி 219 ரன்கள் குவிக்க முக்கிய காரணமாக இருந்தார். ஷிவம் மவி கடைசி ஓவரில் 29 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதனால் அவர் தன்னுடைய கட்டுப்பாட்டை இழந்து மோதலில் ஈடுபட்டார்.

இதேபோல் டெல்லி பந்து வீசும்போது அந்த அணியின் அவேஷ் கானும் மோதல் போக்கில் ஈடுபட்டார். இதுகுறித்து நடுவர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது அவர்கள் ஐபிஎல் வீரர்கள் நன்னடத்தை விதியை மீறியதாக நடுவர்கள் குற்றம்சாட்டினர். இதை இருவரும் ஒத்துக்கொண்டதாலும், இந்த குற்றம் லெவல் 1-க்குள் வருவதாலும் நடுவர்கள் கண்டனத்துடன் எச்சரித்து அனுப்பினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com