ஆர்.சி.பி., ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விற்பனையால் பிசிசிஐ-க்கும் கிடைக்கும் 1500 கோடி ரூபாய்..!

ஆர்சிபி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் 31 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனையான நிலையில், பிசிசிஐ-க்கு 1500 கோடி ரூபாய் கிடைக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது
பிசிசிஐ
பிசிசிஐ
Published on

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 10 அணிகள் விளையாடி வருகின்றன. இதில் ஆர்.சி.பி. மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகைளை விற்பனை செய்ய இரு அணி உரிமையாளர்களும் முடிவு செய்தனர்.

அதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 1.63 பில்லியன் அமெரிக்க டாலருக்கும், ஆர்.சி.பி. அணி 1.78 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் விற்பனையாகியுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை அமெரிக்க தொழில் அதிபர் தலைமையிலான கூட்டமைப்பு வாங்கியுள்ளது.

ஆர்.சி.பி. அணியை ஆதித்யா பிர்லா குரூப் தலைமையிலான கூட்டமைப்பு வாங்கியுள்ளது. இந்திய மதிப்பில் 31 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது. ஒவ்வொரு முறையும் அணி விற்பனை செய்யப்படும் போது, 5 சதவீதம் பிசிசிஐ-க்கு டிரான்ஸ்பர் கட்டணமாக செலுத்த வேண்டும். அதன்படி பார்த்தில் சுமார் 1500 கோடி ரூபாய் பிசிசிஐ வருமானம் கிடைக்கும்.

SA20 லீக்கில் விளையாடும் பார்ல் ராயல்ஸ், வெஸ்ட் இண்டீஸில் நடைபெறும் கரீபியன் பிரீமியர் லீக்கில் விளையாடும் பார்படோஸ் ராயல்ஸ் ஆகியவையும் இந்த ஒப்பந்தத்தின் கீழ் அடங்கும். இதனால் பிசிசிஐ-க்கும் கிடைக்கப்போகும் தொகை எவ்வளவு என்பது துல்லியமாக தெரியவில்லை. 2026 ஐபிஎல் தொடர் முடிவடைந்த பின்னர், உரிமையாளர் மாற்றம் முறையாக அறிவிக்கப்படும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com