கிரிக்கெட்
RCB அணியை வாங்கிய ஆதித்யா பிர்லா குழுமம்..!
ஆதித்யா பிர்லா குழுமம் அமெரிக்க நிறுனவங்களின் கூட்டமைப்புடன் இணைந்து ஆர்சிபி அணியை வாங்கியுள்ளது
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 10 அணிகள் இடம் பிடித்து விளையாடி வருகின்றன. இதில் ஒன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. இந்த அணி கடந்த வருடம் சாம்பியன் பட்டம் வென்றது. 18 வருடங்கள் கழித்து முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இதற்கு கரும்புள்ளியாக பாராட்டு விழா நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அன்றைய தினத்தில் இருந்து ஆர்.சி.பி. அணி உரிமையாளர் அணியை விற்பனை செய்ய தயாராகிவிட்டார் என்ற செய்தி வெளியாகிக் கொண்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் ஆதித்யா குரூப் ஆர்.சி.பி. அணியை வாங்கியுள்ளது. ஆதித்யா பிர்லா குரூப் உடன் இணைந்து அமெரிக்க விளையாட்டு முதலீட்டாளர் டேவிட் பிளிட்சர், அமெரிக்க பங்கு முதலீடு நிறுவனம் பிளாக்ஸ்டோன் ஆகியவை இணைந்த கூட்டமைப்பும் சேர்ந்து ஆர்சிபி அணியை வாங்கியுள்ளது.

