லங்கா பிரீமியர் லீக்: வீரருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக இந்தியாவைச் சேர்ந்த அணி உரிமையாளர் கைது

2018-ம் ஆண்டு 19 வயதிற்கு உட்பட்டோருக்கான இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்ல சதம் அடித்து முக்கிய காரணமாக இருந்தவர்.
மன்ஜோத் கல்ரா
மன்ஜோத் கல்ரா
Published on

இந்தியாவில் ஐ.பி.எல். டி20 நடைபெறுவதுபோல், இலங்கையில் லங்கா பிரீமியர் லீக் நடத்தப்பட்டு வருகிறது. இதில் 5 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன. 2026 சீசன் வருகிற ஆகஸ்ட் மாதம் 8-ந்தேதி தொடங்குகிறது. இதில் மொத்தம் 24 போட்டிகளில் அடங்கும்.

மன்ஜோத் கல்ரா

இதில் பங்கேற்கும் அணிகளில் ஒன்று ஜாஃப்னா கிங்ஸ். இந்த அணியின் உரிமையாளர்களில் ஒருவராக இந்தியாவைச் சேர்ந்த 27 வயதாக மன்ஜோத் கல்ரா உள்ளார். இவர் 2018-ம் ஆண்டும் இந்தியா U19 அணி சாம்பியன் பட்டம் வென்றபோது, இறுதிப் போட்டியில் சதம் அடித்தவர். இவர் வீரருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக இலங்கையின் விளையாட்டுத் ஊழல் தடுப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

ஜாஃப்னா கிங்ஸ்
ஜாஃப்னா கிங்ஸ்

10 நாட்களுக்கு முன்னதாக கல்ரா, ஒரு வீரரை அணுகியுள்ளார். இந்த வீரர் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். அதன்அடிப்படையில் இன்று கல்ரா கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜாஃப்னா கிங்ஸ்

ஜாஃப்னா கிங்ஸ் அணியில் இடம் பிடித்துள்ள இலங்கை வீரர்கள் பனுகா ராஜபக்சே, அவிஷ்கா பெர்னாண்டோ, துனித் வெலலாகே ஆகியோர் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், நாட்டின் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு வீரரைத் தங்கள் பக்கம் ஈர்க்க முயன்றதையும், பந்தய நடவடிக்கைகளை ஏற்பாடு செய்ய முயன்றதையும் ஒப்புக்கொண்ட LPL அணி உரிமையாளர் ஒருவருக்கு, இலங்கை நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையை விதித்தது. அத்துடன் அவருக்கு 24 மில்லியன் இலங்கை ரூபாய்கள் அபராதமும் விதிக்கப்பட்டது.

அணி உரிமையாளர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டாலும், தொடர் எந்த வித இடையூறு இன்றி நடத்தப்படும் என்று கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.

நான்கு ஆண்டு கால ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை என்பது, நீதிபதி நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருந்தாலும் அதை உடனடியாகச் செயல்படுத்தாமல் ஒத்திவைத்து, குற்றவாளியை நன்னடத்தைக் கண்காணிப்பின் (probation) கீழ் சுதந்திரமாக இருக்க அனுமதிப்பதைக் குறிக்கிறது. அக்குற்றவாளி நீதிமன்றம் விதித்த அனைத்து நிபந்தனைகளையும் கண்டிப்பாகப் பின்பற்றி, அக்காலகட்டத்தில் வேறு எந்தக் குற்றத்திலும் ஈடுபடாமல் இருந்தால், அவர் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டியிருக்காது.

X

Maalai Malar
www.maalaimalar.com