உலக கோப்பையில் அதிரடி மாற்றத்தை கொண்டு வந்த ஐசிசி

தென்ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் அடுத்த வருடம் 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது.
ஐசிசி உலக கோப்பை
ஐசிசி உலக கோப்பை
Published on

50 ஓவர் ஆடவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த வருடம் தென்ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியாவில் நடைபெற இருக்கிறது. இதில் 14 அணிகள் பங்கேற்கின்றன. விளையாட்டில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தவும், அர்த்தமுள்ள மற்றும் சரியான போட்டியாகவும் இருக்கும் வகையில் ஐசிசி சில மாற்றங்களை செய்துள்ளது. இந்த மாற்றம் ஐசிசி-யின் வருடாந்திர ஆலோசனைக் கூட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

ரவுண்டு 1

அதன்படி ஐ.சி.சி. 50 ஓவர் உலக கோப்பையில் விளையாட தகுதி பெறும் 14 அணிகளில், கடைசி 3 அணிகள் ரவுண்டு 1-ல் விளையாடும். ரவுண்டு-ராபின் சூப்பர் சீரிஸ் என்ற அடிப்படையில் ஒவ்வொரு அணியும் மற்றொரு அணியுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். இதில் முதல் இடம் பிடிக்கும் அணி, ரவுண்டு-2க்கு முன்னேறும்.

ரவுண்டு-2 (30 போட்டிகள்)

ரவுண்டு-2ல் 11 அணிகள் மற்றும் ரவுண்டு 1-ல் முதல் இடம் பிடித்த அணி உள்பட 12 அணிகள் பலப்பரீட்சை நடத்தும். 12 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்படும். இதுவும் ரவுண்டு-ராபின் முறைதான். இரண்டு பிரிவுகளில் இருந்தும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும். மற்ற 6 அணிகளில் எந்த அணி முதலிடத்தில் உள்ளதோ, அந்த அணி 7-வது அணியாக அடுத்த சுற்றுக்கு முன்னேறும். அதனடிப்படையில் அடுத்து ரவுண்டு 3 என்று அழைக்கப்படும் சூப்பர் 7 சுற்று நடைபெறும்.

ரவுண்டு 3: சூப்பர் 7 (21 போட்டிகள்)

இந்த சுற்றில் 7 அணிகளும் ரவுண்ட்-ராபின் முறையில் விளையாடும். நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். அரையிறுதில் முதல் இடம்- நான்காவது இடம், 2-வது இடம்- 3-வது இடம் பிடித்த அணிகள் பலப்பரீட்சை நடத்தும். அதன்பின் இறுதிப் போட்டி நடைபெறும்.

இந்திய கிரிக்கெட் அணி
இந்திய கிரிக்கெட் அணி

2028 டி20 உலக கோப்பை

அதேபோல் 2028-ல் நடைபெறும் டி20 உலக கோப்பையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் 20 அணிகள் பங்கேற்கும்.

குரூப் சுற்று போட்டிகள்

இதில் 5 குரூப்புகளில் தலா 4 அணிகள் இடம் பெறும். முதலில் 4 குரூப்புகளில் 5 அணி என இருந்தது. 5 குரூப்புகளில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் 10 அணிகள் அடுத்த சுற்றான சூப்பர் 10-க்கு முன்னேறும்.

சூப்பர் 10 (20 போட்டிகள்)

சூப்பர் 10 சுற்றில் 10 அணிகள் தலா 5 அணிகள் கொண்ட இரண்டு குரூப்புகளாக பிரிக்கப்படும். இரண்டு பிரிவுகளிலும் முதல் இடம் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

எலிமினேட்டர் சுற்று (2 போட்டிகளில்)

அரையிறுதிக்கு முன்னேறும் அடுத்த 2 அணிகளுக்காக எலிமினேட்டர்ஸ் நடத்தப்படுகிறது. சூப்பர் 10 சுற்றில் ஒரு பிரிவில் 2-வது மற்றும் 3-வது இடம் பிடிக்கும் அணிகள் மற்றொரு பிரிவில் 2-வது மற்றும் 3-வது இடத்தை பிடிக்கும் அணிகளுடன் மோத வேண்டும். இதில் வெற்றி பெறும் இரண்டு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். அதன்பின் இறுதிப் போட்டி நடைபெறும்.

ஐசிசி-யின் இந்த மாற்றத்தின்படி ஒவ்வொரு அணிக்கும் அதிக போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும்.

X

Maalai Malar
www.maalaimalar.com