தோல்வியில் இருந்து பாடம் கற்பேன்: ஷ்ரேயாஸ் அய்யர் சொல்கிறார்

கேப்டன் பொறுப்பை ஏற்பது எனக்கு கிடைத்த பெருமையாகவே கருதுகிறேன். இந்திய அணிக்கு தலைமை தாங்க வேண்டும் என்பது ஒவ்வொருவரின் கனவாகும்.
ஷ்ரேயாஸ் அய்யர்
ஷ்ரேயாஸ் அய்யர்
Published on

அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக 6 போட்டிகளில் தோல்வியடைந்து ஐசிசி தரவரிசையில் முதல் இடத்தை பறிகொடுத்து பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டது ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்திய டி20 அணி.

இங்கிலாந்துக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டிலும் இந்திய அணி தோற்றது. 258 ரன் இலக்கை எடுக்க முடியாமல் 56 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலம் 0-4 என்ற கணக்கில் தொடரை இழந்தது. முதல் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது.

இந்த தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் கூறியதாவது:-

சூழலுக்கு ஏற்ப மாறத்தவறியதே பின்னடைவுக்கு காரணம். தோல்வியில் இருந்து பாடம் கற்பேன். அயர்லாந்து, இங்கிலாந்து அணிகளிடம் அனைத்து துறைகளிலும் பின்தங்கி விட்டோம். இதுவே தோல்விக்கு காரணம். ஆடுகளம் சூழலுக்கு ஏற்ப நாங்கள் மாறிக் கொள்ளவில்ைல.

கேப்டன் பொறுப்பு பெருமை

கேப்டன் பொறுப்பை ஏற்பது எனக்கு கிடைத்த பெருமையாகவே கருதுகிறேன். இந்திய அணிக்கு தலைமை தாங்க வேண்டும் என்பது ஒவ்வொருவரின் கனவாகும். நிச்சயமாக எனக்கு அழுத்தம் என்றால் பிடிக்கும்.

இந்த தொடரில் இருந்து நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உள்ளன. நாங்கள் அதிகமான கேட்ச்களை தவற விட்டோம். இதுவே எங்களுக்கு பெரும் இழப்பாக இருந்தது.

இவ்வாறு ஸ்ரேயாஸ் அய்யர் கூறினார்.

அயர்லாந்துக்கு எதிரான தொடரை 0-2 என இழந்தது குறிப்பிடத்தக்கது. சஞ்சு சாம்சன் மற்றும் சூர்யவன்ஷி ஆகியோர் மாறி மாறி போட்டிகளில் விளையாட வைக்கப்பட்டனர். இருவரும் சேர்ந்து 6 போட்டிகளில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com