ஐதராபாத்தை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்குள் முதல் அணியாக நுழைந்தது குஜராத்

முதலில் ஆடிய குஜராத் 9 விக்கெட்டுக்கு 188 ரன்களை குவித்தது.தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மன் கில் அதிரடியாக ஆடி சதமடித்தார்.
4 விக்கெட் வீழ்த்திய ஷமி
4 விக்கெட் வீழ்த்திய ஷமி
Published on

அகமதாபாத்:

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச முடிவு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 188 ரன்களை குவித்தது.

தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய ஷுப்மன் கில் 58 பந்துகளில் 13 பவுண்டரிகள், 1 சிக்சர் என 101 ரன்களை விளாசினார். சாய் சுதர்சன் 36 பந்துகளில் 6 பவுண்டரிகள், 1 சிக்சர் அடித்து 47 ரன்னில் ஆட்டமிழந்தார்.

ஐதராபாத் சார்பில் புவனேஷ்வர் குமார் அசத்தலாக பந்து வீசி 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதையடுத்து, 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் களமிறங்கியது. குஜராத் அசத்தலாக பந்துவீச, முன்னணி வீரர்கள் விரைவில் வெளியேறினர்.

இதனால் ஐதராபாத் அணி 59 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட் இழந்து தத்தளித்தது. கிளாசன் மட்டும் தனியாகப் போராடி அரை சதம் கடந்தார்.

8-வது விக்கெட்டுக்கு கிளாசனுடன் புவனேஷ்வர் குமார் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக ஆடியது. பின்னர் கிளாசன் பவுண்டரி, சிக்சர்களை விளாசினார். கிளாசன் 64 ரன்னில் அவுட்டானார். புவனேஷ்வர் குமார் 27 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இறுதியில், ஐதராபாத் அணி 154 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 34 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது. அத்துடன் பிளே ஆப் சுற்றுக்குள் முதல் அணியாக நுழைந்தது.

குஜராத் சார்பில் முகமது ஷமி, மோகித் சர்மா ஆகியோர் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com