ஐபிஎல் ஏலத்தில் UNSOLD.. டி20-யில் 28 பந்தில் சதம் விளாசிய குஜராத் வீரர்

குறைந்த பந்தில் சதம் விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையை ஊர்வில் படேல் படைத்துள்ளார். 2018-ம் ஆண்டு இமாச்சலப் பிரதேசம் அணிக்கு எதிராக ரிஷப் பண்ட் 32 பந்தில் சதம் விளாசினார்.
ஐபிஎல் ஏலத்தில் UNSOLD.. டி20-யில் 28 பந்தில் சதம் விளாசிய குஜராத் வீரர்
Published on

சையது முஷ்டாக் டிராபி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் குஜராத் - திரிபுரா அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த திரிபுரா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் எடுத்தது. குஜராத் தரப்பில் நாக்வாஸ்வல்லா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனையடுத்து குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக ஆர்யா தேசாய்- ஊர்வில் படேல் களமிறங்கினர். தொடக்க முதலே அதிரடி காட்டிய ஊர்வில் படேல் 28 பந்தில் சதம் அடித்து அசத்தினார்.

இறுதியில் குஜராத் அணி 10.2 ஓவரில் 156 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஊர்வில் படேல் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 35 பந்தில் 113 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 12 சிக்சர்களும் 7 பவுண்டரிகளும் அடங்கும். இதன்மூலம் குறைந்த பந்தில் சதம் விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையை இவர் படைத்துள்ளார்.

இதற்கு முன்பு 2018-ம் ஆண்டு இமாச்சலப் பிரதேசம் அணிக்கு எதிராக ரிஷப் பண்ட் 32 பந்தில் சதம் விளாசினார். அதனை தற்போது ஊர்வில் முறியடித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் ஊர்வில் படேலை எந்த அணியும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

X

Maalai Malar
www.maalaimalar.com