

இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
முதலில் நடந்த டி20 தொடரை இங்கிலாந்து 4-0 என வென்றது. முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கார்டிப்பில் இன்று நடைபெறுகிறது.
இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில்லும், இங்கிலாந்து அணியின் கேப்டனாக ஹாரி புரூக்கும் செயல்படுகின்றனர்.
இந்நிலையில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பவுலிங் செய்கிறது. அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்குகிறது.
இந்திய அணியில் கே.எல்.ராகுலுக்கு பதிலாக இஷான் கிஷன் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்திய அணியின் விவரம் வருமாறு:
ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, இஷான் கிஷன், ஷ்ரேயஸ் அய்யர், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஷிவம் துபே, குர்னூர் பிரார், பிரசித் கிருஷ்ணா, ஜஸ்பிரீத் பும்ரா.