

வங்கதேசத்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணி ரன்கள் எடுத்துள்ளது.
வங்கதேச அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
முதலில் நடந்த ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 85 ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி அபார வெற்றி பெற்றது.
அடுத்து நடந்த இரு ஒருநாள் போட்டிகளிலும் ஜிம்பாப்வே அணியே வெற்றி பெற்றது.
இந்நிலையில், ஜிம்பாப்வே, வங்கதேச அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் போட்டி ஹராரேயில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி விக்கெட்டுகளை விரைவில் இழந்தது. அந்த அணி 78 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது.
4-வது விக்கெட்டுக்கு வெஸ்லி மாதேவீர், இன்னசன்ட் காலா ஜோடி 51 ரன்கள் சேர்த்தது. இன்னசன்ட் காலா 25 ரன்னில் அவுட்டானார்.
பொறுப்புடன் ஆடிய வெஸ்லி மாதேவீர் அரை சதமடித்து 75 ரன்னில் வெளியேறினார்.
கடைசி கட்டத்தில் பொறுப்புடன் ஆடிய பிராட் இவான்ஸ் அரை சதம் கடந்தார். அவர் 43 பந்தில் 2 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 50 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இறுதியில், ஜிம்பாப்வே அணி 48.1 ஓவரில் 199 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
வங்கதேசம் சார்பில் ஷோரிபுல் இஸ்லாம் 4 விக்கெட்டும், தஸ்கின் அகமது, தன்வீர் இஸ்லாம் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் அணி களமிறங்குகிறது.