போட்டி 26 ஓவராக குறைப்பு: ஆஸ்திரேலியாவுக்கு 131 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது இந்தியா

16.4 ஓவரில் மழை குறுக்கீடு செய்ததால், 26 ஓவராக ஆட்டம் குறைப்பு.கே.எல். ராகுல், அக்சர் படேல், நிதிஷ் குமார் ரெட்டி ஆட்டத்தால் இந்தியா 136 ரன்கள் சேர்த்தது.
போட்டி 26 ஓவராக குறைப்பு: ஆஸ்திரேலியாவுக்கு 131 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது இந்தியா
Published on

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி இந்திய நேரப்படி இன்று காலை 9 மணிக்கு பெர்த்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு அணிக்கு திரும்பிய சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி மிகுந்த ஏமாற்றம் அளித்தனர். ரோகித் சர்மா 1 பவுண்டரியுடன் 8 ரன்னில் ஹேசில்வுட் பந்தில் ஆட்டம் இழந்தார். கோலி ரன் எதுவும் எடுக்காமல் ஸ்டார்க் பந்தில் டக் அவுட்டானார். அடுத்து கேப்டன் சுப்மன்கில் 10 ரன்னில் (2 பவுண்டரி), நாதன் எல்லீஸ் பந்தில் அவுட் ஆனார். இந்திய அணி 8.1 ஓவரில் 25 ரன்னில் 3 விக்கெட்டை இழந்து திணறியது.

அதன்பின் மழை அடிக்கடி குறுக்கீடு செய்தது. 16.4 ஓவரில் மழை குறுக்கீடு செய்தது. அதன்பின் போட்டி 26 ஓவராக குறைக்கப்பட்டது. 16.4 ஓவரில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்க 52 ரன் எடுத்திருந்தது.

கே.எல். ராகுல், அக்சர் படேல் ஆகியோர் ஆட்டத்தை தொடங்கினர். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சித்தினர். 20ஆவது ஓவரின் கடைசி பந்தில் அக்சர் படேல் ஆட்டமிழந்தார். அவர் 38 பந்தில் 31 ரன்கள் அடித்தார்.

அடுத்து வந்த வாஷிங்டன் சுந்தர் 10 பந்தில் 10 ரன்கள் எடுத்து வெளியேறினார். மறுமுனையில் கே.எல். ராகுல் 31 பந்தில் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நிதிஷ் குமார் ரெட்டி 11 பந்தில் 19 ரன்கள் அடிக்க இந்தியா 26 ஓவரில் 136 ரன்கள் எடுத்துள்ளது. டக்வொர்த் லீவிஸ் விதிப்படி ஆஸ்திரேலியாவுக்கு 131 ரன்க்ள வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com