Today Rasipalan: இன்றைய ராசிபலன் 18.7.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு தொட்ட காரியம் வெற்றி பெறும்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்களை காணலாம்.
Rasipalan
Published on

மேஷம்

தனவரவு திருப்தி தரும் நாள். தைரியத்தோடு செயல்படுவீர்கள். வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். பாகப்பிரிவினைகள் சுமூகமாக முடியும்.

ரிஷபம்

நெருக்கடி நிலை மாறும் நாள். தொழிலில் இருந்த மறைமுகப் போட்டிகளை முறியடிப்பீர்கள். மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும்.

மிதுனம்

அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்கும் நாள். அன்பு நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். அரைகுறையாக நின்ற பணி தொடரும்.

கடகம்

விருப்பங்கள் நிறைவேறும் நாள். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். குடும்பப் பெரியவர்களின் ஆலோசனைகள் கூடுதல் முன்னேற்றம் தரும்.

சிம்மம்

பணம் பலவழிகளிலும் வந்து பையை நிரப்பும் நாள். இல்லத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு.

கன்னி

நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். பணத்தேவைகளை பால்ய நண்பர்கள் பூர்த்தி செய்வர். பக்குவமாகப்பேசி காரியங்களை சாதித்துக்கொள்வீர்கள்.

துலாம்

தொட்ட காரியம் வெற்றி பெறும் நாள். தன்னம்பிக்கையும், தைரியமும் கூடும். பண விவகாரங்களில் நாணயத்தை காப்பாற்றுவீர்கள்.

விருச்சிகம்

தாராளமாக செலவிட்டு மகிழும் நாள். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும். தொழில் வளர்ச்சிக்கு மூலதனம் கிடைக்கும்.

தனுசு

கனவுகள் நனவாகும் நாள். தடைப்பட்ட ஒப்பந்தங்கள் தானாக வந்து சேரும். மற்றவர்களின் விமர்சனங்களை மறந்து செயல்படுவது நல்லது.

மகரம்

சவால்களை சமாளிக்க வேண்டிய நாள். வரவை விட செலவு கூடும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.

கும்பம்

நன்மைகள் நடைபெறும் நாள். பிள்ளைகள் வழியில் பெருமையான தகவல் வந்து சேரும். இடம், பூமி வாங்க போட்ட திட்டம் நிறைவேறும்.

மீனம்

வரவு அதிகரிக்கும் நாள். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். நண்பர்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.

X

Maalai Malar
www.maalaimalar.com