Today Rasipalan: இன்றைய ராசிபலன் 16.7.2026 - இந்த ராசிக்காரர்களுக்கு நினைத்தது நிறைவேறும் நாள்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்களை காணலாம்.
Rasipalan
Published on

மேஷம்

தொல்லை தந்தவர்கள் தோள்கொடுத்து உதவும் நாள். தொழில் முன்னேற்றம் உண்டு. வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். பழைய பாக்கிகள் வசூலாகும்.

ரிஷபம்

முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்கள் கருத்துகளை ஏற்றுக்கொள்வர்.

மிதுனம்

செய்தொழிலில் எதிர்பார்த்தபடி வருமானம் வந்து சேரும். அரசு வழியில் சலுகைகள் கிடைக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.

கடகம்

போன் மூலம் பொன்னான தகவல் வந்து சேரும் நாள். பொதுவாழ்வில் மதிப்பும், மரியாதையும் உயரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும்.

சிம்மம்

மனக்குழப்பம் அகலும் நாள். தொழிலில் கூடுதல் லாபம் உண்டு. இடம் வாங்க எடுத்த முயற்சி வெற்றி தரும். உத்தியோகத்தில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.

கன்னி

சிந்தனைகள் வெற்றி பெறும் நாள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். குடும்பத்தினர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர்.

துலாம்

யோகமான நாள். சுபகாரியப்பேச்சு கைகூடும். ஒளிமயமான எதிர்காலத்திற்கு நண்பர்கள் ஒத்துழைப்பு செய்வர். திருமண பேச்சுகள் முடிவாகும்.

விருச்சிகம்

வசதிகள் பெருகும் நாள். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். வி.ஐ.பி.க்கள் வீடு தேடி வருவர். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.

தனுசு

யோசித்து செயல்பட வேண்டிய நாள். வரவைவிட செலவு கூடும். உடல் நலனில் கவனம் தேவை. குடும்பத்தில் மூத்தவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

மகரம்

நினைத்தது நிறைவேறும் நாள். நண்பர்கள் நல்ல தகவல்களை கொண்டுவந்து சேர்ப்பர். வருங்கால நலன் கருதி சேமிக்கும் எண்ணம் உருவாகும்.

கும்பம்

பணத்தேவைகள் பூர்த்தியாகும் நாள். உறவினர் வழியில் ஏற்பட்ட தகராறுகள் அகலும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

மீனம்

தன்னம்பிக்கை கூடும் நாள். தொழில் ரீதியாக புதிய திட்டமொன்றை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் மனதில் இடம் பெறுவீர்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com